மன்னாரில் RAJES KANTHA தனியார் வைத்தியசாலை தீக்கிரை-தீயணைப்பு வாகனம் இல்லாமையால் தொடரும் அவலம்-வீடியோ,படங்கள்
மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இன்மையால் இன்றைய 24-04-2020 தினம் வெள்ளிக்கிழமை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பொது வைத்திய சாலைக்கு அருகில் உள்ள RAJES KANTHA தனியார் வைத்தியசாலை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று மாலை குறித்த வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாக குறித்த வைத்தியசாலை எரிந்து நாசமாகியுள்ளதுடன் அதிகளவான மருத்துவ உபகரணங்கள் மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட 35 லட்சத்துக்கும் அதிகளவான பெறுமதியுடைய சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விபத்து தொடர்பாக உடனடியக செயற்பட்ட பொலிசார் மன்னார் நகரசபையினர், இராணுவத்தினர் கடற்படையினர் பொதுமக்களின் உதவியுடன் குறித்த பகுதியில் உள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஒழுங்கான தீயணைப்பு ஏற்பாடு மன்னார் மாவட்டத்தில் இன்மையால் நகரசபை மற்றும் பொலிஸாரின் நீர் கொண்டு செல்லும் வாகனங்களை பயன்படுத்தியே குறித்த விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துவருவதுடன்
தீயணைப்பு வாகனம் இன்மையால் இதுவரை 10 மேற்பட்ட பெரும் தீ விபத்துக்கள் கடந்த இரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்ட பகுதிகளுக்குள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இன்று மாலை குறித்த வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாக குறித்த வைத்தியசாலை எரிந்து நாசமாகியுள்ளதுடன் அதிகளவான மருத்துவ உபகரணங்கள் மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட 35 லட்சத்துக்கும் அதிகளவான பெறுமதியுடைய சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விபத்து தொடர்பாக உடனடியக செயற்பட்ட பொலிசார் மன்னார் நகரசபையினர், இராணுவத்தினர் கடற்படையினர் பொதுமக்களின் உதவியுடன் குறித்த பகுதியில் உள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஒழுங்கான தீயணைப்பு ஏற்பாடு மன்னார் மாவட்டத்தில் இன்மையால் நகரசபை மற்றும் பொலிஸாரின் நீர் கொண்டு செல்லும் வாகனங்களை பயன்படுத்தியே குறித்த விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துவருவதுடன்
தீயணைப்பு வாகனம் இன்மையால் இதுவரை 10 மேற்பட்ட பெரும் தீ விபத்துக்கள் கடந்த இரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்ட பகுதிகளுக்குள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் RAJES KANTHA தனியார் வைத்தியசாலை தீக்கிரை-தீயணைப்பு வாகனம் இல்லாமையால் தொடரும் அவலம்-வீடியோ,படங்கள்
Reviewed by Author
on
April 24, 2020
Rating:

No comments:
Post a Comment