ஆபத்தான நிலையில் இலங்கை? அமெரிக்கா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை -
அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஆய்வுப் பல்கலைக்கழங்களில் ஒன்றான ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் என்கிற பல்கலைக்கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அடுத்தவாரத்தில் இலங்கையில் புதிதாக 244 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்கிற எதிர்வுகூறலை அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்கப் ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம்,
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை விடவும் ஆரம்ப 20 நாட்களில் இலங்கையில் தீவிரமாக வைரஸ் பரவியிருக்கின்றது.
எனினும், தற்போது அமெரிக்காவின் நிலைமை படுமோசமாகிவிட்டது. அமெரிக்காவில் ஆரம்ப 20 நாட்களில் 20 பேரே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானியாவில் 9 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும், இலங்கையில் கடந்த 20 நாட்களில் 150 பேர் இனங்காணப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில், தற்போது 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நிலையில் இலங்கை? அமெரிக்கா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை -
Reviewed by Author
on
April 03, 2020
Rating:

No comments:
Post a Comment