கிளிநொச்சியில் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
கிளிநொச்சி - தர்மக்கேணி பகுதியில் காணாமல் போன மாணவன் இன்று கிளாலி,ஆனையிறவு கடற்கரை தொடுவாயில் சடலமான மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கடந்த 28.4.2020 திகதி காணாமல்போயுள்ளதாக தெரிவித்து பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .
இம்மாணவன் கிளிநொச்சி , தர்மக்கேணி அ.த.க கல்லூரியில் கடந்த வருடம் 2019 ஆண்டு சாதாரண தர பரீட்சையில் தோற்றியிருந்ததுடன், பரீட்சையில் இம்முறை சித்தியடையவில்லை என்பதும் குறிப்படத்தக்கது.
கிளிநொச்சியில் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
Reviewed by Author
on
May 04, 2020
Rating:

No comments:
Post a Comment