அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மூர்வீதி கட்டுப்பள்ளி வாசல் கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு-

மன்னார் மூர்வீதி, காட்டுப்பாள்ளிவாசல் கிராம மக்களிடம் அக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தொடர்ச்சியாக வலிந்து சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் எனவும் குறித்த குடும்பத்திற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மூர்வீதி காட்டுப்பாள்ளிவசால் கிராம மக்கள் சார்பாக மூர்வீதி கிராம அபிவிருத்திச் சங்கம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர்,மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரை காட்டுப்பள்ளி வாசல் கிராமத்தைச் சேர்ந்த சில மக்கள் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த குடும்பத்தினர் எமது கிராம மக்களுடன் முரண்பட்டுக் கொண்டு வலிந்து சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டவர்கள்.

மேற்படி தம்பதியினர் அண்மைக்காலமாக எமது ஊரில் சமூக பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து எமது ஊரின் சமூக நல்லுறவுகளில் பாரிய எதிர்த் தாக்கங்களையும்  ஏற்படுத்தி வருகின்ற விசமிகள் என்பது அவர்களின் அசாதாரண வாழ்வியல் நடவடிக்கையில் இருந்து தெரிய வருகின்றது.

எனவே குறித்த தம்பதியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மேற் கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரின் பிரதிகள்  மூர்வீதி கிராம அலுவலகர் , மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மன்னார் தேசிய இளைஞர் படையணி பொறுப்பதிகாரி ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் வினவிய போது,,,

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் ஒருவரும்,மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றிய ஒருவரும் அப்பகுதியில் பாதையை பிடித்து அடைத்துள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பாக தனி நபர் என்ற முறையில் மன்னார் நகர சபையில் முறையிட்டேன்.

இதன் போது குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் நீதிமன்றத்தில் கடமையாற்றிய நபரும் அடியாட்களை ஏற்பாடு செய்து எனது வீட்டைச் சுற்றி வீட்டின் முன் கதவை உடைத்து எனது வீட்டிற்கு வந்து உறவினரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக நான் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போது தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகி பல நாட்களின் பின் அவர்களை பொலிஸார் பிடித்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த பிரச்சினையை மூடி மறைப்பதற்காக அவர்களுக்கு அருகில் வசிப்பவர்களை அழைத்துக் கொண்டு எனக்கும்,எனது குடும்பத்திற்கும் எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நான் அலுவலகத்தில் இல்லாத நிலையில் மன்னார் தேசிய இளைஞர் படையணியிற்கு குறித்த பொலிஸ் அதிகாரி மக்களை அழைத்து வந்து எனக்கு எதிராக வண்முறையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கைக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளேன்.
நான் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மன்னார்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன். என அவர் மேலும் தெரிவித்தார்.






மன்னார் மூர்வீதி கட்டுப்பள்ளி வாசல் கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு- Reviewed by Admin on June 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.