மன்னாரில் இன்றைய தினம் பாடசாலைகள் முதற்கட்டமாக திறப்பு.......
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக,
மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29)
முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.
முதற் கட்டமாக
அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக
ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு
அறிவித்திருந்தது.
இக்காலப் பகுதியில் பாடசாலைகளை
சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம்
செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே
அறிவித்துள்ளது.
-இதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.
-எனினும்
இன்றைய தினம் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட ஏனை
ஊழியர்கள் சமூகம் அழித்த போதும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும்
ஊழியர்களின் வருகை குறைவடைந்து காணப்பட்டது.
-பாடசாலைகளுக்கு
மன்னாh வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் விஜயம் செய்ததோடு,மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யும் நடவடிக்கையும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த சில
தினங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் துப்பரவு
பணிகள்,மற்றும் கிருமி தொற்றும் நடவடிக்கைகளை பாடசாலை நிர்வாகம்
மேற்கொண்டுள்ளனர்...
மன்னாரில் இன்றைய தினம் பாடசாலைகள் முதற்கட்டமாக திறப்பு.......
Reviewed by Author
on
June 29, 2020
Rating:

No comments:
Post a Comment