மன்னாரில் 'சுவிஸ் தாய் நிலம் அறக்கட்டளை'யின் மன்னார் மாவட்ட பணிமனை வைபவ ரீதியாக திறந்து வைப்பு.....
சுவிஸ் தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட பணிமனை
இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் வயல் வீதியில் வைபவ
ரீதியாக திறந்து வைக்கப்பட்டது....
சுவிஸ் தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது சுவிஸ் தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட பணிமனை மற்றும் கல்விக்கழகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த
நிகழ்வில் சுவிஸ் தாய் நிலம் அறக்கட்டளையின் தலைவர் பவான், சுவிஸ் தாய்
நிலம் அறக்கட்டளையின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரமேஸ் , மன்னார் மாவட்ட
சட்டத்தரணிகளாக எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,எஸ்.டிணேசன் ஆகியோர் கலந்து கொண்டர்.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,முன்னாள் போராளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்
போது தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு பாதனிகள் வழங்கி
வைக்கப்பட்டதோடு,65 பேரூக்கு உலர் உணவு பொதிகளும்,50 பேரூக்கு
மூக்குக்கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.....
விளம்பரத்தை தொடந்து செய்திகள்
மன்னாரில் 'சுவிஸ் தாய் நிலம் அறக்கட்டளை'யின் மன்னார் மாவட்ட பணிமனை வைபவ ரீதியாக திறந்து வைப்பு.....
Reviewed by Author
on
June 27, 2020
Rating:
No comments:
Post a Comment