கொழும்பு துறைமுக ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதம்..........
சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட மூன்று கிரேன்களை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் அமைக்காப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது.
துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கிரேன்களை நிறுவ அதிகாரிகள் சம்மதிக்கும் வரை போராட்டம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த பிரச்சினை குறித்து இன்று (02) காலை 10.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக சுதந்திர துறைமுக ஊழியர் சங்கத் தலைவர் லால் பங்கமுவகே தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலில் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காவிட்டால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
அலரி மாளிகையில் நேற்று (01) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைக் கூறினார் என்பது குறிப்பிட தக்கது...
கொழும்பு துறைமுக ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதம்..........
Reviewed by Author
on
July 02, 2020
Rating:

No comments:
Post a Comment