மன்னாரில் கேரளா கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது........
மன்னார் சின்னக்கருஸல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட
கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர்
ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(21) இரவு மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல்
தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின் அறிவுரையின்
பேரில் மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி கிருசாந்தனின்
வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி
உப பொலிஸ் பரிசோதகர் குமார தலைமையிலான குழுவினர் சின்னக்கருஸல் பகுதிக்கு
சென்று நேற்று(21) செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது
மூன்று பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6
கிலோ 90 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்டனர்.
-மேலும்
குறித்த கஞ்சா பொதிகளை தனது உடமையில் வைத்திருந்த குறித்த கிராமத்தைச்
சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். '
மன்னாரில் கேரளா கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது........
Reviewed by Author
on
July 22, 2020
Rating:
Reviewed by Author
on
July 22, 2020
Rating:







No comments:
Post a Comment