மன்னார் கற்கடந்த குளம் கிராமத்தில் இடம் பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி (Photos)
மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரனையில், மன்னார் கற்கடந்த குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் கற்கடந்த குளம் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று சனிக்கிழமை மாலை இரட்டை மாட்டுவண்டி சவாரி போட்டி இடம் பெற்றது.
-குறித்த போட்டியில் மன்னார்,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 25 சோடி காளைகள் போட்டியில் கலந்து கொண்டிருந்தது.
போட்டியானது A,B,C,D ஆகிய நான்கு பிரிவுகளில் இடம் பெற்றது.
இதன் போது A,B,C ஆகிய மூன்று பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகள் வெற்றி பெற்றது.D பிரிவில் யாழ் மாவட்ட காளைகள் வெற்றி பெற்றது.
-வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(19-07-2020)
மன்னார் கற்கடந்த குளம் கிராமத்தில் இடம் பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி (Photos)
Reviewed by Author
on
July 19, 2020
Rating:

No comments:
Post a Comment