பிரித்தானியாவில் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட வாய்ப்பு
பிரித்தானியாவில் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கிங்ஸ் கல்லூரி லண்டன் மேற்கொண்ட ஆய்வில், இத்தாலி அடங்களாக 10 பிரித்தானிய மருத்துவமனை தளங்களில் சிகிச்சை பெற்ற எட்டு நோயாளிகளில் ஒருவருக்காவது வைரஸ் தொற்று பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது ஒப்பீட்டளவில் குறைந்த வீதமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதுடன், பயனுள்ள தொற்று கட்டுப்பாடு இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
ஏப்ரல் 28ஆம் முதல் 1,500 தொற்றுகளின் தரவை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். இது பிரித்தானியாவின் உச்சத்தை காண்பித்தது.
இதுகுறித்து டாக்டர் பென் கார்ட்டர் கூறுகையில், ‘இந்த நோயாளிகளில் பெரும்பாலோர் ஏற்கனவே நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்தனர். அவர்கள் வயதானவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் முன்பே இருந்த சுகாதார கண்காணிப்பின் கீழ் இருந்தனர்’ என கூறினார்.

No comments:
Post a Comment