அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
கருங்கல் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் நடைமுறையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைத்து கொள்வதற்கு பயன்பாடு மற்றும் அகழ்வு கட்டணங்கள் ஒரே முறையின் கீழ் செயற்படுத்தப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தினார்.
அதற்கமைய கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்களின் நிலுவையிலுள்ள வரி கொடுப்பனவுகளை சலுகை முறையின் கீழ் செலுத்தக் கூடியவாறு திருத்தம் மேற்கொள்ளுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொடர்பில் அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் போது பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று பரிந்துரை கடிதங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய கருங்கல் உற்பத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு தீர்வாக, அகழ்விற்கான அனுமதி பத்திரங்களை வழங்கும்போது பொதுவான ஒரு முறைக்கு உட்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பரிந்துரையை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தில் மாத்திரம் பெறவும், ஒரு பாறை பிரித்தெடுக்கும் திட்டத்திற்கு ஒரு முறை மட்டுமே தொல்பொருள் பரிந்துரைகளை வழங்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.
சூரியவெவ பிரதேசத்தில் குகைகள் மற்றும் குளங்களை கொண்ட நிலங்களில் கடந்த காலத்தில் கருங்கல் அகழ்விற்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள பாரிய கற்பாறைகள் இரண்டில் ஒரு கற்பாறையில் இதுவரை கருங்கல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இவை தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த சந்தர்ப்பத்திலேயே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க அவர்களை அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.கே.பீ.ஹரிஸ்சந்திர, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, அன்டன் பெரேரா, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.டீ.சீ.வேரகொட, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியிலாளர் டீ.சஜ்ஜன டி சில்வா, மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் சிறிபால அமரசிங்க, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தேசிய கருங்கல் உற்பத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
Reviewed by Author
on
September 18, 2020
Rating:

No comments:
Post a Comment