பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானம்
அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது. அத்தோடு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் கடனை மீள செலுத்துவதற்கு முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு Online கல்வி முறையை தொடர்வதற்காகவும் இந்த வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.
2019 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆங்கில பாடநெறிகள் Online ஊடாக கற்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானம்
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment