மனைவியின் தந்தையை அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டணை
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (23) குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தனது மனைவியின் தந்தையான நாகராசா பூலோகராசா என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மூதூர், சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜேசேகரன் விஜேகரன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மனைவி கர்ப்பிணியாக இருக்கின்ற போது தனது மனைவியை தாக்கிய நேரத்தில் மனைவியின் தந்தையாரான நாகராசா பூலோகராசா என்பவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதேவேளை உயிரிழந்தவரின் மனைவிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் தந்தையை அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டணை
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment