பாரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மற்றுமாரு கட்டடம் கண்டுபிடிப்பு!
ஹெம்மாதகம நகரில் அரனாயக்க வீதியில் அமைந்துள்ள இக்கட்டடம் பாதுகாப்பில்லாத ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அவதானமான நிலையில் உள்ளதாக அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனாலேயே இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம் மூன்று மாடிக்கட்டடத்தின் முதலாம், இரண்டாம் மாடிகள் வி யாபார நிலையங்களுடன் அமைந்துள்ளன. மூன்றாவது மாடியில் நீண்ட காலமாக பிரத்தியேக வகுப் புக்கள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் இக்கட்டடத்தின் பல பிரதான தூண்கள் மற்றும் சுவர்கள் வெடித்து இடைவெளிகள் காணப்படுகின்றன.
இக்கட்டடத்தின் முன்னால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கணிசமான அளவில் நடமாடுகின்றனர்.
இவ்விடத்தில் பாரிய விபத்தொன்று இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காகவும் இவ்விடத்தில் விசேட பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மற்றுமாரு கட்டடம் கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment