வவுனியா - செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
இரவு வீட்டில் தூங்கச்சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார்.
காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு சடலம் மீட்கப்பட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த சு.நாகேந்திரன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment