அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வர்த்தக நிலையங்கள் மூடல்-அரச தனியார் போக்கு வரத்து சேவைகள் வழமை போல்.

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ளது.

 மன்னார் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்றது. அரச ஸ்தாபனங்கள், வங்கிகள் வழமை போல் செயல் பட்டது. 

மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம் பெற்ற போதும் சட்டத்தரணிகள் மன்றிற்கு சமூகமளிக்கவில்லை. -மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிஸாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் வர்த்தக நிலையங்கள் மூடல்-அரச தனியார் போக்கு வரத்து சேவைகள் வழமை போல். Reviewed by Author on September 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.