முல்லைத்தீவு விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த மகேந்திரன் கவிஞ்ஞன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை நகர் பகுதியில் இருந்து முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர், முள்ளியவளை ஆலடி பகுதியில் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment