மத்திய தபால் பரிமாற்றகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறாது
இதனை தவிர, மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கான தபால் விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கமைய, மேல் மாகாணம், காலி தலைமை தபால் அலுவலகம் மற்றும் பாலித்த உப தபால் அலுவலகம், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள தபால் நிலையங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில தபால் நிலையங்களிலும் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தபால் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளுக்கான தபால்களை நாட்டின் ஏனைய தபால் அலுவலகங்களில் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதிகளில் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மத்திய தபால் பரிமாற்றகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறாது
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment