மன்னார் பேசாலையில் இடம் பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.
அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி 'எங்கள் நாடு எங்கள் கைகளில்' என்ற கருப்பொருளில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இருந்து மரியாள் பாடசாலை வரை பிரதான வீதி வழியாக ஊர்வலமாக சிறுவர்கள் மகிழ்வுடன் சென்றனர்.
இதன் போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் முக மூடி அணிந்து, ஆர வாரத்துடன் கைகளை அசைத்து மகிழ்ச்சியாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் ஒன்று கூடிய சிறுவர்கள் கைகளை தட்டி பாட்டு பாடி மகிழ்ந்தனர்.மேலும் சிறுவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலையில் இடம் பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.
Reviewed by Author
on
October 01, 2020
Rating:
No comments:
Post a Comment