அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாளை இந்தியாவில் திறக்கப்படவுள்ளது!

இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாளை திறக்கப்படவுள்ளது. இமாசல பிரதேசம், மணாலியில் இருந்து லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், ஒன்பது கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டுள்ள இந்த சுரங்கப் பாதைக்கு ‘அடல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுரங்கப் பாதையை பிரதமர் மோடி நாளை இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.

 இதனால் குறித்த சுரங்கப்பாதை பகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்தச் சுரங்கம் உலகிலேயே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கம் எனப் பெயர் பெற்றுள்ளதுடன் இதனை அமைக்க 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. 

 அத்துடன், மணாலியில் இருந்து லே பகுதிக்குச் செல்லும் தூரத்தில் 46 கிலோமீற்றர் குறைவதுடன் பயண நேரத்தில் நான்கு மணிநேரம் சேமிக்கப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன், சுரங்கத்தில் ஒவ்வொரு, 60 மீற்றர் இடைவெளியில் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு 250 மீற்றர் இடைவெளியில் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டும், ஒவ்வொரு, 500 மீற்றர் தூரத்தில் அவசரகால வெளியேறும் வழியும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை நாளை இந்தியாவில் திறக்கப்படவுள்ளது! Reviewed by Author on October 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.