அண்மைய செய்திகள்

recent
-

புதைக்கப்பட்ட கட்டுத் துவக்கு தவறுதலாக வெடித்ததில் மனைவி உயிரிழப்பு.

கரும்பு செய்கையை மிருகங்களிலிருந்து பாதுகாக்க கணவனால் புதைக்கப்பட்ட கட்டுத் துவக்கு தவறுதலாக வெடித்ததில் மனைவி உயிரிழந்துள்ளார்.

 சியம்பலாண்டுவ புறநகர் பிரதேசமான ஹெலமுல்ல பிரதேசத்தில் கரும்பு தோட்டத்தினை காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக கணவனால் கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக மனைவியின் கால் மிதிபட்டு வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சியம்பலாண்டுவ,ஹெலமுல்ல பகுதியியைச் சேர்ந்த ஆர்.எம்.பிரேமாவதி (52)எனும் நான்கு பிள்ளைகளின் தாயாவர். பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்தவுடன் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும். அதேவேளை இறந்தவரின் கணவர் இதற்கு முன்னரும் இவ்வாறு சட்டவிரோத கட்டுத்துவக்கு பயன்படுத்தியதில் கால் பாதத்தினை இழந்தவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதைக்கப்பட்ட கட்டுத் துவக்கு தவறுதலாக வெடித்ததில் மனைவி உயிரிழப்பு. Reviewed by Author on October 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.