அண்மைய செய்திகள்

recent
-

விஜய் சேதுபதிக்கு எதிராக இலண்டனில் திரண்ட தமிழ் உணர்வாளர்கள்

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பேசும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்பதை வலியுறுத்தி உலகம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது நாம்தமிழர் கட்சியின் சர்வதேச கட்டமைப்பு. 

 அதன் பிரகாரம் நேற்றையதினம் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. பிரித்தானிய தலைநகர் இலண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு விஜய் சேதுபதிக்கெதிரான தமது கண்டனத்தை பதிவு செய்ததோடு கூடவே அதில் நடிக்க கூடாதென்பதையும் வலியுறுத்தி இருந்தனர். 

  முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பேசும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்பதை வலியுறுத்தி பிரித்தானியாவின் பல பகுதிகளில் விஜய் சேதுபதிக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கடைகள்,கோவில்கள்,திரையரங்குகள் முன்பாக அவை ஒட்டப்பட்டிருந்ததை காண முடிந்தது.

விஜய் சேதுபதிக்கு எதிராக இலண்டனில் திரண்ட தமிழ் உணர்வாளர்கள் Reviewed by Author on October 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.