அண்மைய செய்திகள்

recent
-

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி..!

கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகளை திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெஸில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். 

 மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியவசியமான சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதற்கு முறையான நடவடிக்கையொன்றை திட்டமிடுவதாக, அத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அவர் இதன்போது அறிவுறுத்தியுள்ளார். இதேநேரம், வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பதுடன், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய வயது முதிர்ந்தவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

 எனவே, பொது உதவிகள், ஓய்வூதியம் என்பவற்றை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்கள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளுக்கும் பெஸில் ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தல் வழங்கினார். வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 அரசாங்க அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெற்று அந்த நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு பெசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார். இதேநேரம், கடன் தவணைகளை செலுத்துவதற்கு நிவாரண காலமொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஒரு வார காலமாக முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 இதேநேரம், கொழும்பு நகருக்குள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றமையால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, கொழும்பிற்கு வருகைத்தருவோரை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிர்வாக அமைச்சிற்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்து, பிரதேச மட்டத்தில் அரச அலுவலகங்களை பராமரிப்பது தொடர்பான வழிமுறை வகுக்கப்பட வேண்டும் என குறித்த கூட்டத்தில் கலந்துடையாடப்பட்டது.

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி..! Reviewed by Author on October 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.