ரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜனவரியில்
இந்த மனு மீதான விசாரணை இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் நீதிபதி மொஹமட் மீஹார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்குடன் தொடர்புடைய இரசாயண பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் அந்த திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதனை அடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதவான் உத்தரவிட்டார்.
தலைமன்னார் பகுதியில் உள்ள 80 ஏக்கர் காணியை போலி உறுதி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
ரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜனவரியில்
Reviewed by Author
on
October 22, 2020
Rating:
Reviewed by Author
on
October 22, 2020
Rating:


No comments:
Post a Comment