யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு!
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒத்திவைக்கப்பட்டுள்ள பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் தொடர்பில், பகிரங்க அறிவித்தல் மூலமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தின் ஊடாகவும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை 021 222 3612 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு!
Reviewed by Author
on
October 28, 2020
Rating:

No comments:
Post a Comment