மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
குறித்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு பொது மக்கள் தெரிவித்த தகவலையடுத்து குறித்த நபர் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மேற்கொணட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு பத்தரமுல்லை பகுதியிலுள்ள மீன்சந்தைக்கு சென்று குறித்த கொரோனா தொற்றாளர் பொது பேருந்தின் ஊடாக மட்டக்களப்பிற்கு வந்தடைந்துள்ளார் எனவும் அவர் பிரயாணித்த பேருந்து மற்றும் அதில் பிரயாணம் செய்தவர்கள் தொடர்பாக ஆராயப்படுகின்றது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 வயது உடைய ஒருவரும் உயிரிழந்துள்ளார் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கோட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!
Reviewed by Author
on
October 27, 2020
Rating:

No comments:
Post a Comment