மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா
அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐப்பசி மாதத்தில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்ததால் சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.
ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.
எனவே தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டு காணப்படும்.
ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் புகழோடு விளங்கும் மாமன்னர் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment