அண்மைய செய்திகள்

recent
-

லியோனில் தேவாலயத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!

லியோனின் 7 ஆம் வட்டாரத்தின் rue du Père Chevrier வீதியில் உள்ள ஓர் தேவாலயத்தில் (31/10/2020) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஓர் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது, கிரேக்கத்தைச் பாதிரியார் ஒருவே இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார், கைத்துப்பாக்கியை பயன்படுத்தி நடந்த இத்தாக்குதலில் பாதிரியார் இரு தடவைகள் சுடப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது. குறித்த பாதிரியார், தேவாலயத்தை மூடிக்கொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

 மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஒரு ஜோன்டார்ம் ஹெலிகாப்டர் லியோனின் தெற்கே நகரின் மீது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பறந்தது. புலனாய்வாளர்களால் அப்பகுதி தற்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்கும் படி உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


லியோனில் தேவாலயத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! Reviewed by Author on November 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.