கிளிநொச்சியில் வரட்சி – குடிநீருக்காக அல்லலுறும் மக்கள்!
அப்பகுதியில் வாழும் 450 புடும்பங்களில் 200 குடும்பங்கள் வரை குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். குறித்த குடியிருப்பின் ரயர்கடை சந்தி என கூறப்படும் புகதியில் 35 அடீக்க மெல் ஆழம் கொண்ட கிணறுகள் வற்றி வரண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீர் தேவைக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும், குளிப்பதற்கு அருகில் உள்ள குளத்திற்கு செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் அமைந்துள்ள குளத்தின் நீரும் வற்றியுள்ளமையால் சேறும் சகதியுமான நிலையில் நீராடவேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள் அப்பகுதியில் முதலைகளின் அச்சுறுத்தலும் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் பெரும் சிரமங்களை விநாயகபுரம் மக்கள் தெரிவிகொள்வதாக தெரிவிக்கின்றனர்.
வருடம் தோறும் குறித்த பிரச்சினைக்கு இக்காலப்பகுதியில் எதிர்கொள்வதாகவும், குறித்த காலப்பகுதியில் தமக்கான குடிநீர் உள்ளிட்ட தேவைகளிற்காக நீர் வினியோக திட்டம் ஒன்றைஆரம்பித்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேவேளை குடிநீருக்காக அப்பகுதியில் பொதுக் கிணறுகளை அமைத்தும், இருக்கின்ற பொதுக்கிணறுகளை ஆழமாக்கியும் கொடுப்பதன் ஊடாக கணிசமான அளவு நீர் தேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது காணப்படும் வரட்சியான நிலை காரணமாக தமது பிரதேசத்தில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது உள்ளதாகவும், கால்நடைகள் உள்ளிட்டவையும் பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றர்.
இவ்வாறான நிலயைில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளு்ம, பிரதேச சபையினரும் தமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தற்புாதையை நிலையை அறிந்து விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றை முன்வைக்க வே்ணடும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கிளிநொச்சியில் வரட்சி – குடிநீருக்காக அல்லலுறும் மக்கள்!
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment