கட்டுப்பாட்டை இழந்த கென்டர் வாகனம் விபத்து; மூவர் காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கென்டர் வாகனமானது, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்துக் காரணமாக குறித்த வாகனத்தின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், அவ்வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளான வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்விபத்து குறித்து வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த கென்டர் வாகனம் விபத்து; மூவர் காயம்
Reviewed by Author
on
November 19, 2020
Rating:
Reviewed by Author
on
November 19, 2020
Rating:




No comments:
Post a Comment