மன்னாரில் மாவீரர் தின ஏற்பாட்டிற்கு சம்மந்தம் இல்லாத நால்வர் உற்பட ஐவருக்கு தடை உத்தரவு.
இவ்விடையம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில்
எதிர் வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறக் கூடாது எனவும், மன்னார் நீதிமன்ற நியாயதிக்க எல்லைக்குள் மாவீர் தினத்தை நினைவு கூறுவதை தடுக்கும் வகையில், மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் வெய்து தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல்,அன்ரன் றொஜன் ஸ்ராலின்,வி.எஸ்.சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேரூக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் எதிர் வருகின்ற 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறக் கூடாது எனவும், மாவீரர் தினத்தில் பொது மக்களை ஈடுபடுத்துவதை தடுக்கும் வகையிலும் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் மாவீரர் தின ஏற்பாட்டிற்கு சம்மந்தம் இல்லாத நால்வர் உற்பட ஐவருக்கு தடை உத்தரவு.
Reviewed by Author
on
November 19, 2020
Rating:
Reviewed by Author
on
November 19, 2020
Rating:



No comments:
Post a Comment