தொற்றாளர்களை இனங்காண்பதில் பலத்த இடர்பாடு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
“கொரோனாத் தொற்றானது, தொற்று ஏற்பட்டாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமலேயே மக்களிடத்தே பரவிவருகின்ற காரணத்தினால், நாம் 14 நாட்கள் கடக்கும் வரையில் எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று கூறுவது கடினம்.
முக்கியமாக பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரமே அறிகுறி இல்லாதவர்களுக்கும், தொற்று இருக்கின்றதா, இல்லையா என முடிவுசெய்யவேண்டியுள்ளது.
அதேவேளை குறித்த கொரோனத் தொற்றானது பி.சி.ஆர் பரிசோதனையிலும் கிட்டத்தட்ட 70 வீதமான வர்களுக்கு தொற்று இருந்தால்கூட சாதாரண முடிவுகளைக் காட்டுகின்றது.
ஆகையினால் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.
எனவே எமக்குச்சந்தேகமான அனைவரையும் சுயதனிமைப்படுத்தலிலோ, அல்லது மற்றவர்களுடன் சம்பந்தப்படாத ஓர்இடத்திலேயோ தனிமைப்படுத்துவதை நாம் வழக்கமாகக்கொண்டுள்ளோம்.
தொற்றாளர்களை இனங்காண்பதில் பலத்த இடர்பாடு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment