தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி
14 நாட்களுக்கு தேவையான படி தயாரிக்கப்பட்டுள்ள இந்த உணவு பொதியை,மாவட்ட செயலகம் மற்றும் அரசாங்க அதிபர்களின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவுகள் 13ல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6025 குடும்பங்களுக்காக, பழங்கள் மற்றும் உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம, தெஹிவளை,மொரட்டுவை மற்றும் கடுவலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6807 குடும்பங்களுக்கும் இந்த உணவு பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று களுத்துறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2245 குடும்பங்களுக்கும் இந்த உணவு பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், கேகாலை மாவட்டத்தில் ஆயிரத்து 248 குடும்பங்களுக்கு இந்த உணவு பொதிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஊடாக பெற்று, அவ்வாறு புதிதாக இணையும் குடும்பங்களுக்கும் குறித்த பத்தாயிரம் ரூபாய் உணவு பொதிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment