VOC நாணயங்கள் மற்றும் பீங்கான்களை தேடி வந்த 4 தென்பகுதி நபர்கள் மன்னாரில் கைது
கொழும்பு குளியாப்பிட்டியை சேர்ந்த நான்கு நபர்களே மேற்படி வங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த நபர்கள் மன்னார் பகுதியில் பழங்காலத்து VOC என பொறிக்கப்பட்ட நாணயம் மற்றும் பீங்கான்களை தேடி வந்ததாகவும் அவ் நபர்களின் அனைவரின் தொலைபேசிகளிலும் பழங்காலத்து நாணயங்களின் புகைப்படங்களும் காணப்பட்ட நிலையில் அவர்களை சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்ட போது ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களை கூறியதுடன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததைத் தொடர்ந்தே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் முன்னிலையாகி குறித்த நபர்கள் சார்பான வதத்தையும் முன்வைத்த நிலையில் சம்மந்தப்பட்ட நான்கு நபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
VOC நாணயங்கள் மற்றும் பீங்கான்களை தேடி வந்த 4 தென்பகுதி நபர்கள் மன்னாரில் கைது
Reviewed by Author
on
November 15, 2020
Rating:

No comments:
Post a Comment