அண்மைய செய்திகள்

recent
-

'மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் பயனாளிகளுக்கு அன்பான வேண்டுகோள்'

வைத்தியசாலையை நாடி வரும் அன்பான பயனாளர்களே! ​தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொடிய ஆட்கொல்லி கொரோனா வைரசின் தாக்கத்தை நாம் அறிவோம். இக் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி விடாது எம்மையும் எம் சமூகத்தையும் பாதுகாக்கும் கடமை எமக்குண்டு எனவே சுகாதார அமைச்சின் நடைமுறைகளைச் செயற்படுத்தும் எமது வைத்தியசாலையில் அவ்விடயங்களை நாம் கடைப்பிடிப்போம.; எமது வைத்தியசாலையில் இரு பிரதான நுழைவாயில்கள் உள்ளன அவையாவன. 

❖ 1ம் நுழைவாயில் (புயவந 01) ய. வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு. டி. விடுதிக்கு நோயாளர்களை அனுமதிக்கும் பிரிவு. இவ் இரண்டு தேவைகளையுடைய நோயாளர்கள்ஃபயனாளர்கள் மட்டுமே இந்த நுழைவாயில் வழியாக வருமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.

❖ 2ம் நுழைவாயில் (புயவந 02) ய. சகல கிளினிக் பயனாளர்கள். டி. விடுதிக்கு நோயாளர்களைப் பார்வையிடச் செல்வோர். (எளைவநள) இத் தேவைகளை உடையவர்கள் மட்டும். 2ம் நுழைவாயிலைப் பயன்படுத்துமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம். இவ் இரு பாதைகளினால் உள் நுழையும் அனைவரும் பின்வரும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய கொடிய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? என உறுதி செய்து கொள்ளுங்கள். அதாவது

1. மூக்கையும் வாயையும் மூடிய சரியான முகக் கவசம் முறையாக அணிந்து உள்ளே வாருங்கள்.
2. 1-2 மீற்றர் இடைவெளியை பேணி உள்ளே வாருங்கள்.
3. இரு நுழைவாயில்களிலும் கை கழுவுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சவர்க்காரமிட்டு கைகளை நன்றாக கழுவுங்கள். தயவு செய்து இம் மூன்று சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி கொடிய ஆட்கொல்லி கொரோனா வைரசின் பிடிக்குள் சிக்கி விடாது நீங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது எம்மையும், எமது சமூகத்தையும் பாதுகாக்கும் சுகாதார நடைமுறையாகும். 1ம் நுழைவாயில் வழியாக வரும் பயனாளர் கவனத்திற்கு.

 • வெளி நோயாளர் பிரிவில் (ழுPனு) சிகிச்சை பெறுவோர், விடுதிக்கு அனுமதிக்கப் படுவோர் மட்டுமே இந்த 1ம் நுழைவாயில் வழியாக உள்ளே வாருங்கள். ஏனையோர் இந்த நுழைவாயிலால் உட் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

 • வெளி நோயாளர் பிரிவில் (ழுPனு) முன்புறம் உள்ளே விசாரனைப் பிரிவில் இருக்கும் பணியாளர்கள் தங்களிடம்; கேட்டும் கேள்விகளுக்கு தயவு செய்து சரியான பதிலை கூறுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம். அதாவது காய்சல், இருமல், தடிமன் உள்ளதா? வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளீர்களா? மேலும் உங்களின் விலாசம், தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றைச் சரியாக சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு உரிய சரியான சிகிச்சையை எங்களால் வழங்க முடியும். 2ம் நுழைவாயில் வழியாக வரும் பயனாளர் கவனத்திற்கு.

• சகல கிளினிக் தொடர்பான தேவை கருதி வருபவர்கள், நோயாளர்களைப் பார்வையிட விடுதிக்கு வருபவர்கள் மட்டுமே இந்த 2ம் நுழைவாயிலைப் பயன்படுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். 

• கிளினிக் பயனாளர்களே! சகல கிளினிக் மருந்துகளும் உங்களுக்கு தபால் மூலம் உங்கள் வீடுகளுக்கு எம்மால் அனுப்பி வைக்கப்படும். அதற்காக வைத்தியசாலையின் 023-2222-349 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு திங்கள் முதல் சனி வரைக்கும் (ஞாயிறு தவிர்ந்த) காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். முக்கியமாக தொலைபேசித் தொடர்பு கொள்ளும் போது உங்கள் கிளினிக் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தொடர்பு கொள்ளுங்கள். சரியான விபரங்களை வழங்கும் போது சிரமமின்றி உங்களுக்குறிய மருந்துகளை உரிய காலத்தில் வழங்க முடியும். 

 • குறிப்பு:- முக்கிய தேவை ஏற்படின் வைத்தியரைச் சந்திக்க வேண்டி உள்ள போது மட்டும் கிளினிக்கிற்கு வாருங்கள். கிளினிக் செல்லும் வழியில் வைத்தியசாலைப்பணியாளர் ஒருவர் உங்கள் விபரங்கள் பதிவதற்கு அமர்த்தப்பட்டுள்ளார். அவரிடம் உங்களின் சரியான விபரங்களைப் பதிந்த பின்னர் உள்ளே செல்லுங்கள்;. கிளினிக் செல்லும் வழியில் நிற்கும் பாதுகாப்பு பணியாளர்களிடம் உங்கள் தேவைகளைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்குரிய விபரங்களை சொல்லுவார்கள். அவர்களுடன் முரண்பட வேண்டாம் என அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். விடுதிகளுக்குப் பார்வையிடச் செல்லும்; பயனாளர்களின் கவனத்திற்கு.
 • கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஒரு நாளில் நண்பகல் 12.00மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை ஒரு நேரம் மட்டுமே நோயாளர் பார்வையிடும் நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் வரும் போது அடுத்த நாள் நண்பகல் 12 மணி வரை தேவையான அனைத்தையும் உங்கள் உறவினருக்குக் கொண்டு வாருங்கள். தேவையற்று வைத்தியசாலை வளாகத்தில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 • ஒரு நோயாளருக்கு ஒரு பார்வையிடும் அனுமதி அட்டை மட்டுமே வழங்கப்படும். அதனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். தயவு செய்து உரிய பார்வையிடும் அடடையைப் பயன்படுத்தி வேறு விடுதிகளுக்குச் சென்று நோயாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம். 

 ❖ குறிப்பு :- 
➢ முகக் கவசத்தை அடிக்கடி கையால் தொடுதல்.
➢ வைத்தியசாலையின் பொது இடங்களில் எச்சில் துப்பதல். 
➢ பலர் சமூக இடை வெளி இன்றி கூடி நின்று சம்பாசித்தல். போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம். பயனாளர்களே!இத்தனை சிரமங்கள் மத்தியிலும் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பதற்காக நன்றி கூறுகின்றோம். 'சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம். கொடிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுதலை பெறுவோம்.' உங்கள் முறைப்பாடுகளையும் கருத்துக்களையும் பின்வரும் தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். 

023-2222349 பணிப்பாளர் 
மாவட்ட பொது வைத்தியசாலை, 




மன்னார்.
'மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் பயனாளிகளுக்கு அன்பான வேண்டுகோள்' Reviewed by Author on November 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.