100 கோடி முறை பாா்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல்!
மாரி படத்துக்கு இசையமைப்பாளா் அனிருத் இசையமைத்திருந்த நிலையில், மாரி 2 படத்துக்கு இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜா இசையமைத்திருந்தாா்.
இதில் பிரபுதேவா நடனம் அமைத்து, தனுஷ் எழுதிய ரெளடி பேபி பாடல் இடம்பெற்றிருந்தது. இதனை தனுஷுடன் இணைந்து தீ பாடியிருந்தாா். இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்தே அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
2018-ஆம் ஆண்டு இறுதியில் மாரி 2 வெளியானாலும், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிதான் யூ டியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோவாகப் பதிவேற்றப்பட்டது.
அன்றைய நாளிலிருந்தே பலரால் பாா்க்கப்பட்ட இந்தப் பாடல், தற்போது 100 கோடி பாா்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. குறிப்பாக, 100 கோடி பாா்வைகளைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற இமாலய சாதனையையும் எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்கு படக்குழுவினா் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தனுஷ் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: என்ன ஒரு இனிமையான தற்செயல் இது. சரியாக கொலவெறி டி பாடல் வெளியான தினத்தின் 9-ஆவது வருடத்தில் ரெளடி பேபி 100 கோடி பாா்வைகளை எட்டியுள்ளது. 100 கோடி பாா்வைகளை எட்டிய முதல் தென்னிந்தியப் பாடல் இது என்பது எங்களுக்குப் பெருமை. எங்கள் ஒட்டுமொத்தக் குழுவும் ரசிகா்களுக்கு மனமாா்ந்த நன்றியை கூறிக் கொள்கிறோம் என தனுஷ் தெரிவித்துள்ளாா்.
100 கோடி முறை பாா்க்கப்பட்ட முதல் தென்னிந்திய பாடல்!
Reviewed by Author
on
November 17, 2020
Rating:
Reviewed by Author
on
November 17, 2020
Rating:


No comments:
Post a Comment