அண்மைய செய்திகள்

recent
-

2021 Budget - மஞ்சள், இஞ்சி இறக்குமதி முற்றிலும் தடை

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், மஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதியை செய்வது முற்றிலும் தடை செய்வதாக தெரிவித்துள்ளார்.

 கொழும்பு, களுத்துறை, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நெல் உற்பத்திக்கான உரத்தை இலவசமாக வழங்கவும், மற்ற பயிர்களுக்கு ரூ .1500 ரூபாய் வீதம் வழங்கவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021 Budget - மஞ்சள், இஞ்சி இறக்குமதி முற்றிலும் தடை Reviewed by Author on November 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.