அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மரணம்!

வவுனியா – மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் 58 வயது பெண் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதென மரண விசாரணை அதிகாரி க.ஹரிப்பிரசாத் தெரிவித்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயான இவர் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9ம் திகதி வருகை தந்த நிலையில் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் நேற்று (17) உடல்நலக்குறைவு காரணமாக மரணித்துள்ளார். இறந்த பெண்ணின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், பிசிஆர் முடிவு இனியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது பிள்ளைகளுக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மரணம்! Reviewed by Author on November 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.