அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா முடக்கம் நிறைவுக்கு வந்த உடன் ஜிம்கள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.

இங்கிலாந்தில் தற்போது அமுலில் உள்ள முடக்க நிலை நிறைவுக்கு வந்த உடன் அனைத்து பகுதிகளிம் உள்ள அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் ஜிம்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 2ம் திகதியுடன் முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில் திங்கள் பிறபபகல் 3 நிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தீர்மானம் வெளியிடுவார். 

சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும் என்பதுடன் மதுபானசாலைகள் உணவகங்கள் மூடப்படும் நேரங்கள் தளர்த்தப்படும்.அதனுடன் ஜிம்கள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மீள திறக்கப்படும்.3 நிலைகளும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாரியளவான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் துரித மருத்துவ சேவையையும் முன்னெடுக்கப்படும் என இன்று பிரதமர் அறிவிக்க உள்ளார். அடுத்த மாதம் நலக் காப்பகங்கள் மற்றும் அங்கு வந்து செல்லும் விருந்தினர்களுக்கு நாடுமுழுவதிலும் பரிசோனை மேற்கொள்ளப்படும்.இதேவேளை வெளியரங்கு விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரதமர் தெரிவிக்க உள்ளார்.பல பகுதிகள் அதிக ஆபத்துள்ள வலயங்களை அடையாளப்படுத்தப்பட உள்ளன.இது குறித்த தகவல்கள் வியாழக்கிழமை வெளியிடப்படும்.




பிரித்தானியா முடக்கம் நிறைவுக்கு வந்த உடன் ஜிம்கள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும். Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.