அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 30 குளங்கள் இது வரை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது-மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா.

கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக் குறை காரணமாக 36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார். 

 குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, -மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே அனுமதிக்கப்பட்டது.

 இறுதியில் 80 மில்லியன் நிதியே எமக்கு கிடைத்தது. அதில் விவசாயிகளின் வேலை இடைநிறுத்தப்படக் கூடாது என்பதற்காக 130 மில்லியன் ரூபாவுக்கான வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒப்பந்த காரர்களுக்கு 50 மில்லியன் ரூபா கடனாக கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கான கொடுப்பனவுகள் கொடுத்து முடிக்கப்பட்டதும் விடுபட்டிருந்த 6 குளங்களுடன் புதிதாக 7 குளங்களும் உள்வாங்கப்பட உள்ளது. மொத்தம் 13 குளங்கள் மன்னார் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. இவை அடுத்த வருடம் ஜனவரியின் பின்னரே ஆரம்பிக்கப்படும். என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா மேலும் தெரிவித்தார்.




மன்னார் மாவட்டத்தில் 30 குளங்கள் இது வரை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது-மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா. Reviewed by Author on November 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.