வீட்டில் இருந்து பேனையை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்
சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் செல்லும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் முதலானவற்றை அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இதேபோன்று அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருபவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு செல்லும் போது அங்கு ஆவணங்களை பூர்த்திச் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் உங்களது சொந்த பேனையை பயன்படுத்துவது சிறப்பானதாகும். இதன் காரணமாக இவ்வாறான அலுவல்களுக்காக செல்லும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பத்திலும் பேனை ஒன்றை வைத்திருப்பது முக்கியமானதாகும். இது மிகவும் சுகாதார பாதுகாப்பு மிக்கதாக இருக்கும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து பேனையை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்
Reviewed by Author
on
November 19, 2020
Rating:
Reviewed by Author
on
November 19, 2020
Rating:


No comments:
Post a Comment