கிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும் – வறுமையிலும் சாதித்த சகோதரிகள்
ஆனால் அங்கு ஏன் கணித விஞ்ஞானப் பிரிவுகள் எனக் கேட்டவர்களுக்கு இப்போது
அந்தப் பாடசாலை பதிலளிக்க ஆரம்பித்திக்கிறது. உயர்தரம் ஆரம்பித்ததன்
பின்னர் பல மாணவர்கள் பின்தங்கிய அந்த பிரதேசங்களிலிருந்து
பல்கலைகழகங்களுக்கு சென்றிருந்தாலும் முதற்தடவையாக
பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து பொறியியல் துறைக்கும் (E2) சித்த
மருத்துவ துறைக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள்
செல்கின்றார்கள்.
தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட- மலையக பின்னணியுடையவர்கள் குடியேற்றப்பட்ட கிராமங்களே பாரதிபுரம் பாடசாலையினை சூழவுமுள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் விவேகானந்தநகர் போன்ற கிராமங்களாகும். பெருமளவு உடல் உழைப்பையே நம்பி வாழ்க்கையினை கொண்டு செல்கின்ற இந்த மக்கள் இப்பொழுது கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தை நோக்கி செல்வதனை பல குறிகாட்டிகள் வெளிப்படுத்தினாலும் கல்வியில் முன்னேற இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது
.
.
கிளிநொச்சி கிராமத்திலிருந்து முதலாவது பொறியியலாளரும் மருத்துவரும் – வறுமையிலும் சாதித்த சகோதரிகள்
Reviewed by Author
on
November 25, 2020
Rating:
Reviewed by Author
on
November 25, 2020
Rating:


No comments:
Post a Comment