வவுனியாவில் சுழற்சி முறையில் மின்வெட்டு
எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் புதிய சின்னக்குளம் மற்றும் அரசடிக்குளம் ஆகிய கிராமங்களிலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10 ஆம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையான கிராமங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியா அரசடிக்குளம் கிராமத்திலும் 18 ஆம் திகதி வன்னி இராணுவ படை முகாம் , விமான படை முகாம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10 ஆம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் மின்சார தேவைக்கான மாற்று வழிமுறைகளை பேணுமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வவுனியாவில் சுழற்சி முறையில் மின்வெட்டு
Reviewed by Author
on
December 10, 2020
Rating:
Reviewed by Author
on
December 10, 2020
Rating:


No comments:
Post a Comment