மஹிந்த-சார்ள்ஸ் உறவை அம்பலப்படுத்திய நாமல்
நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்,அரசின் ஒரு லட்சம் கிலோ மீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்,அம்பாறை மாவட்டத்தின் ஒரு கிலோ மீற்றர் பாதை கூட செப்பனிடப்படவில்லை என குற்றம் சுமத்தினார். மேலும் அம்பாறை மாவட்டகிராம பகுதிகள் அபிவிருத்தி பணிகளில் புறக்கணிக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய நாமல் ராஜபக்ச, 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டின் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை,அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு தடுத்து நிறுத்தியிருந்தது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதிகளை உள்ளடக்கிய,ஒரு லட்சம் கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். எந்தவொரு விதத்திலும் வடக்கு,கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை புதிய அரசு கைவிடவில்லை. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை தற்போதைய அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன்,தவராசா கலையரசன் கூறுவது என்னவென்றால், இவரது பிரதேசத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் காப்பெட் பாதை அபிவிருத்தி திட்டம் அரசியல் ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது.இவரது பிரதேசத்தில் உள்ள பாதைகளில்,10 15 கிலோமீற்றர்களையேனும் புனரமைத்துத் தாருங்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ச,அந்த குறைபாடுகள் குறித்து பேசுவோம்.நீங்கள் என் தந்தையாரை(மஹிந்த ராஜபக்ச) சந்திக்க வீட்டிக்கு அடிக்கடி வருவீர்களல்லவா? அப்படி வரும் போது அந்த நாடாளுமன்ற உறுப்பினரையும்(கலையரசன்) கூட்டிக்கொண்டு வாருங்கள் பேசுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த-சார்ள்ஸ் உறவை அம்பலப்படுத்திய நாமல்
Reviewed by Author
on
December 11, 2020
Rating:
Reviewed by Author
on
December 11, 2020
Rating:


No comments:
Post a Comment