அண்மைய செய்திகள்

recent
-

மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடையோருக்கு நாளை பிசிஆர் பரிசோதனை!

மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா. தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது யாழ்ப்பாணம், மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொற்றுக்குள்ளான வருடன் நேரடி தொடர்புடையோருக்கு நாளைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், PCR சோதனைக்குட்படுத்தப்பட்டார் இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

 மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளான வர் சகல பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் நாளையதினம் அவருடன் தொடர்பு பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதனடிப்படையில் குறித்த சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி ஆராய்ந்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடையோருக்கு நாளை பிசிஆர் பரிசோதனை! Reviewed by Author on December 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.