மன்னாரில் மாவட்ட ரீதியில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை அடையாளப்படுத்தும் செயற்திட்டம்
புத்தாக்கத்துடன் இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குதல் எனும் தொணிப்பொருளில் இடம் பெற்ற மன்னார் மாவட்டத்திற்கான செயற்திட்ட போட்டியில் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிளகு அறைக்கும் இயந்திரம், விரைவில் வெப்பமாகும் அதே நேரத்தில் குளிர் இழக்கும் கருவி(பெளத்) செயற்கை முறையில் குஞ்சு பொறிக்க வைக்கும் கருவி ,குப்பைகளை நிரல்படுத்தும் கருவி என பல்வேறு கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
குறித்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப்பணிப்பாளர் N.M முனாபர் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.T.பூலோகராஜா மன்னார் ரெலிக்கோம் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.A.J.K.குலாஸ் விவசாய திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் R.ரஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த புத்தாக்கத்திற்கான தெரிவை மேற்கொண்டனர்.
மேற்படி தெரிவில் வெற்றி பெரும் கண்டுபிடிப்பாளர்கள் தேசிய மட்டத்திலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் மாவட்ட ரீதியில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை அடையாளப்படுத்தும் செயற்திட்டம்
Reviewed by Author
on
December 31, 2020
Rating:

No comments:
Post a Comment