அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம் – 1200 பேருக்கு தடுப்பூசி

கிளிநொச்சி மாவட்டத்தில், 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர். இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன், முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி வைததியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினருக்கும் குறித்த தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 கிளிநொச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கொவிட்-19 தடுப்பபூசிகள் வழங்கப்படுவதாகவும் 1200 பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம் – 1200 பேருக்கு தடுப்பூசி Reviewed by Author on January 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.