அண்மைய செய்திகள்

recent
-

கேச வாபஸ் வாங்கு, இல்லனா – பண மோசடி புகார் அளித்த ஈழப் பெண்ணை மிரட்டியுள்ள ஆர்யா

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர், 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு கலர்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

 இந்த நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக இலங்கைப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக பரவி வரும் ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்ததோடு தன்னிடம் பெற்ற பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருக்கிறார் என்றும் அந்த பெண் புகார் அளித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. 

 மேலும் அந்த பெண் அளித்த புகாரின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றும் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வந்தது . விட்ஜா, என்ற அந்த பெண் இந்திய பிரதமர் மற்றும் அந்த அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறார். பணத்தை திருப்பிக் கேட்டால் ஆர்யாவின் அம்மா,ஸ்ரீலங்காகாரி நீ, உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்கனு சொன்னதாகவும் அவரது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வாக்குவாதங்கள் பணப் பரிவர்த்தனைகள் போன்றவர்களுக்கு ஆதாரங்களையும் தன்னுடைய புகாரில் அவர் இணைத்து உள்ளதாகவும் தெரிகிறது. 

 இந்த சம்பவத்தால் கொஞ்சம் பரபரப்புஏற்பட்டு இருந்தது. ஆனால், இதுகுறித்து ஆர்யா எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்று (மார்ச் 10) ஆர்யா நிலையில் இரண்டாவது வருட திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் தன் மீது அளிக்கப்டுள்ள புகாரை வாபஸ் வாங்குமாறு ஆர்யா மிரட்டல் விடுவதாக சில ஆதாரங்களை வெளியிட்டுள்ள ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

 மேலும், ஆர்யா, அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விட்டுள்ள ஆதாரத்தையும் அந்த பெண் வெளியிட்டுள்ளார். அதில், அந்த நியூஸ்ஸ ரிமூவ் பண்ண சொல்லு ரிமூவ் நியூஸ்ஸ பணம் வராது. நீ புகார் அளித்தாலும் சரி, புகார் அளிக்கவில்லை என்றாலும் சரி. உன் வீடு தேடி ஆட்களை வர வச்சிறதா. பொய் சொல்லி பணத்தை வாங்கிட்டு நியூஸ் போட்றயா என்று அந்த வாட்ஸ் அப் சாட்டில் ஆர்யா அனுப்பியுள்ளதாக அந்த பெண் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

கேச வாபஸ் வாங்கு, இல்லனா – பண மோசடி புகார் அளித்த ஈழப் பெண்ணை மிரட்டியுள்ள ஆர்யா Reviewed by Author on March 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.