மன்னாரில் மணல் அகழ்வதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்த நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்-மன்னார் நீதிமன்றம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரும்,திடீர் மரண விசாரணை அதிகாரியுமான றொஜன் ஸ்ராலின் தனக்கு வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதி புதுபிக்கப்படவில்லையெனவும் அரச அதிகாரிகள் தங்கள் பணியை ஒழுங்காக மேற்கொள்ளவில்லை எனவும் கோரி மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், நானாட்டன் பிரதேச செயலாளர், மற்றும் சுரங்கம் மற்றும் அகழ்வுக்கு பொறுப்பான அதிகாரி மீது வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் விசாரனை இடம் பெற்றது.
இருப்பினும் குறித்த வழக்கை விசாரிப்பதற்கு நீதவான் நீதி மன்றத்திற்கு நியாதிக்கம் இல்லையெனவும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் மக்கள் பிரதி நிதி என்ற அடிப்படையில் அவர் அரச பணியை செய்யவில்லை என கோர முடியாது எனவும், குறித்த வழக்கு அடிப்படை அற்றது எனவும் இதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் எஸ்.டிணேஸன் ஆகியோர் வாதத்தை முன் வைத்தனர்.
வாத பிரதி வாதங்களை கேட்ட நீதவான் குறித்த வழக்கில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதோடு, தனி நபர் பிராது என்ற அடிப்படையில் குறித்த வழக்கை முறைப்பாட்டு காரர் கை வாங்கினார்.
இதே வேளை மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மன்னாரில் அதிகரித்து வரும் சட்ட விரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தவும் பொது மக்களின் தேவைக்காக மணல் அகழ்வு செய்வதற்கும் பொருத்தமான இடங்களை தேடிய கள விஜயம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இதன் போது நானாட்டான் பிரதேசத்திற்கு உற்பட்ட அருவியாறு, பண்ணை வெட்டுவான் போன்ற இடங்களிலுள்ள ஆற்றுப் பகுதிகள் பார்வையிடப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மணல் அகழ்வதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்த நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்-மன்னார் நீதிமன்றம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்தது.
Reviewed by Author
on
March 20, 2021
Rating:

No comments:
Post a Comment