மன்னார் மறைமாவட்ட ஆயரின் பூதவுடல் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு.
மாலை 3 மயிளவில் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியூடாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலை சந்தியூடாக மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியை சென்றடையும்.
அங்கிருந்து பெரிய கடை வழியாக மன்னார் நகரப்பகுதியில் வந்தடைந்து
அங்கிருந்து மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாக சென்று மன்னார் புனித செபஸ்டியார் பேராலய வீதியூடாக டெலிகொம் சந்தியை சென்றடையும்.
ஆங்கிருந்து ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடயும்.
பின்னர் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்hக பூதவுடல் வைக்கப்படும். நாளை திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை அஞ்சலிங்கு வைக்கப்பட்டு மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன்,ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட ஆயரின் பூதவுடல் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு.
Reviewed by Author
on
April 04, 2021
Rating:

No comments:
Post a Comment